பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

இந்தியாவில் ஒரு சதவீத மக்களிடம் தேசத்தின் 22 % வருமானம்: மக்களிடையே சமத்துவமின்மை அதிகரிப்பு

செய்திப்பிரிவு


இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கையும், மக்களிடையே சமத்துவமின்மையும் அதிகரித்து வருவதாகவும், 2021ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 22 சதவீதம் ஒரு சதவீத மக்களிடம் இருப்பதாகவும், 13 சதவீத வருமானம் மட்டுமே நாட்டின் பாதியளவு மக்களிடம் இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலக சமத்துவமின்மை அறிக்கை” 2022 என்ற தலைப்பில்உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் இணை இயக்குநர் லூக்காஸ் சான்செல் அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகளவில் பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் பிரான்ஸ் பொருளாதார நிபுனர் தாமஸ் பிக்கெட்டி ஆகியோர் சேர்ந்து அறிக்கை தயாரித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளவில் மக்களிடையே சமத்துவமின்மை அதிகமாக இருக்கும் நாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் சமத்துவமின்மை அதிகமாக இரு்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.

இந்தியாவின் இளைஞர்களின் சராசரி ஆண்டு வருவமானம் என்பது ரூ.2 லட்சத்து 4200 ஆக இருக்கிறது. மக்கள் தொகையில் 50 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் என்பது வெறும் ரூ.53 ஆயிரத்து 610 ஆக இருக்கிறது. ஆனால், 10சதவீத மக்கள் 20 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள், அதாவது ஆண்டுக்கு ரூ.11 லட்சத்து 66 ஆயிரத்து 520 வருமானம் பெறுகிறார்கள்.

ஆனால்,தேசத்தின் வருமானத்தில் 22 சதவீதம் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேரிடம் இருக்கிறது, 10 சதவீத மக்களிடம் 57 சதவீத வருமானம் இருக்கிறது. வெறும் 13 சதவீதம் மட்டுமே 50 சதவீத மக்களிடம் இருக்கிறது.

இந்தியா ஏழைகள் நிரம்பிய, சமதத்துவமற்ற நாடாகவும், செல்வந்தர்கள் உயர்ந்து தனித்துவமாகத் தெரியும் நாடாக இருந்து வருகிறது. இந்திய மக்களின் சராசரி குடும்பச் சொத்து என்பது ரூ. 9 லட்சத்து 83 ஆயிரத்து10 ஆக இருக்கிறது.

கடந்த 1980களின் நடுப்பகுதியில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடு நீக்கம், தாராளமயமாக்கள் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டபின், உலகளவில் மக்களிடையே வருமானத்திலும், சொத்துக்கள் சேர்ப்பதிலும் பெரும் சமத்துவமின்மை காணப்படுகிறது.

பாலின சமத்துவமும் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. பெண் ஊழியர்களின் வருமானப் பங்கு என்பது 18சவீதமாக இந்தியாவில் இருக்கிறது. ஆனால் சீனா தவிர்த்து ஆசியாவில் இது மிகக் குறைவாகும். உலகளவில் இந்த சதவீதம் மிகக்குறைவு. மத்திய கிழக்கு நாடுகளில் பெண் தொழிலாளர்கள் வருமானப் பகிர்வு 15 சதவீதமாக இருக்கிறது.

உலகளவில் அதிகமான வருமானம் உள்ள நாடுகளிலும் பாலின சமத்துவமின்மை இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருக்கிறது. ஆனால்,சமத்துவம்இருக்கும் நாடுகளில் ஒன்றாக சுவீடன் இருக்கிறது.

ஆனால், குறைந்தவருமானம், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சமத்துவமன்மை அதிகாக இருக்கிறது. குறிப்பாக பிரேசில், இந்தியாவில் வருமானச் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. அதிகமான அளவில் சீனாவும், குறைந்த அளவில் சமத்துவமின்மை இருக்கும் நாடுகளில் மலேசியா, உருகுவே இருக்கின்றன.

இந்த சமத்துவமின்மை சீராக அதிகரிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியாவில் சமத்துமின்மை வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகள், சீனாவில் சமத்துவமின்மை இருந்தாலும் அது குறைந்தவேகத்தில்தான் இருக்கின்றன.

கரோனா வைரஸால் பொருளாதாரத்தில் ஏற்பட்டசிக்கல்கள், நெருக்கடிகள் சமதத்துவமின்மைஅளவை மேலும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக செல்வந்தர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT