திருப்பதி 2022 காலண்டர், டைரி அமேசானில் விற்பனை

By என்.மகேஷ்குமார்

ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலண்டர், டைரிகளை வெளியிடுகிறது.

இதன்படி, 2022-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரிகள் விற்பனைஆன்லைனில் அமேசான் மூலமாகவும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் உள்ள ‘பப்ளிகே ஷன்ஸ்’ மீது கிளிக் செய்து, டெபிட்/கிரெடிட் அட்டை மூலம் பணம்செலுத்தலாம். இவர்களுக்கு தபால் மூலம் காலண்டர்கள், டைரிகள் வழங்கப்படும்.

இதுதவிர காலண்டர்கள், டைரிகளை அதிகமாக வாங்க விரும்புவோர், “தலைமை நிர்வாக அதிகாரி, தி. தி. தேவஸ்தானம், திருப்பதி” எனும் பெயரில் டி.டி. எடுத்துஅதனை, “சிறப்பு அதிகாரி, புத்தக விற்பனை மையம், பிரஸ்காம்பவுண்ட், கே.டி. ரோடு, திருப்பதி” எனும் முகவரிக்கு அனுப் பலாம். வண்ணமயமான 12 பக்க காலண்டர்ரூ.130, பெரிய டைரி ரூ.150, சிறிய டைரிரூ.120, டேபிள்டாப் காலண்டர் ரூ.75, ஏழுமலையானின் தனி காலண்டர் ரூ.20, பத்மாவதி தாயார் தனி காலண்டர் ரூ.15, பத்மாவதி தாயார் சமேத ஏழுமலையான் காலண்டர் ரூ.15, தெலுங்கு பஞ்சாங்கம் ரூ.30 என விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி, திருமலையில் உள்ள அனைத்து புத்தக மையங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் இவை கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்