சர்ச்சை கருத்து பதிவிட்டதற்காக சம்மன் பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்கக் குழு முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.
சமூக ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களுக்காக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் சமீபத்தில் இந்திய சுதந்திரத்தைப் பற்றியும் சீக்கியர்களைப் பற்றியும் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு மிகவும் கண்டித்தக்கவை என்ற வகையில் பலத்த எதிர்ப்பு உருவானது.
சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக மும்பையில் சீக்கியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் கங்கனாவுக்கு எதிராக மும்பை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவானது.
மேலும், கங்கனாவுக்கு டெல்லி சட்டப்பேரவையில் அமைக்கப்பட்ட அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு கங்கனாவுக்கு இன்ஸ்டாகிராமில் அவர் சீக்கியர்கள் பற்றிய இழிவான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்று நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது.
» ஷியா முஸ்லிம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்துவாக மதம் மாறினார்
» நலிந்த பிரிவினருக்கு எதிராக உ.பி.யில் தினம் தினம் அட்டூழியங்கள்: மாயாவதி குற்றச்சாட்டு
பிப்ரவரி 2020 இல் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்களுக்குப் பிறகு, நகரத்தில் அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்களை ஆராய ஆணையத்துடன் கூடிய குழுவாக அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு உருவாக்கப்பட்டது ஆகும்.
இக்குழு ரணாவத்துக்கு அனுப்பியிருந்த சம்மனில், ''தங்கள் வலைதளப் பதிவுகளில் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று ஒட்டுமொத்தமாக சீக்கியர்களை முத்திரை குத்துவது, நல்லிணக்கத்தை சீர்குலைத்துமூலம், ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்திற்கும் காயம் விளைவிக்கும் அவமானத்தை ஏற்படுத்தும்" என்று கூறியிருந்தது.
"உங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் 20.11.2021 அன்று நீங்களே வெளியிட்டதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் /பதிவுகள், மூர்க்கத்தனமான புண்படுத்தும் மற்றும் இழிவான இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் இடுகைகளை வெளிப்படுத்தும் வகையில் குழு பல புகார்களைப் பெற்றுள்ளது..." என்று கமிட்டி கங்கனாவுக்கு அனுப்பியிருந்த தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
ஆனால் அவர் இன்று டெல்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு முன் நேரில் ஆஜராகவில்லை.
இதுகுறித்து குழுவின் தலைவரான ராகவ் சாதா கூறியதாவது:
"தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பொறுப்புகள் காரணமாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு முன் ஆஜராக முடியாது என்று அவரது வழக்கறிஞர் ஒரு கடிதத்தில் தெரிவித்தார். நேரில் ஆஜராவது தொடர்பாக அவர் மேலும் அவகாசம் கோரியுள்ளார்.
எனவே இன்றைய கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. குழு தனது முடிவை அவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கும்"
இவ்வாறு ராகவ் சாதா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago