மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சிக்கு கரோனா விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூச்சிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.
» நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் அமித் ஷா இன்று அறிக்கை
» புதிய கட்சி தொடங்குவாரா?- காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்த குலாம் நபி ஆசாத்
இந்தநிலையில் அந்நாட்டின் அதிகாரத்தை ராணுவம் மீண்டும் கையில் எடுத்தது. ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தது, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆங் சாங் சூச்சிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆங் சாங் சூகிக்கு 505 (பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னாள் அதிபர் வின் மைன்ட்டுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago