தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் விபரீதம்: நாகாலந்தில் தொழிலாளிகள் 13 பேர் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 13 தொழிலாளிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மான் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டதில் பொதுமக்கள் 13 பலியாகினர்.

இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் இது குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் , மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர் நெப்பியூ ரியோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்