மூத்த பத்திரிகையாளரான பத்மஸ்ரீ வினோத் துவா டெல்லியில் காலமானார்

By ஆர்.ஷபிமுன்னா

மூத்த தேசிய இந்தி பத்திரிகையாளரான வினோத் துவா(67) நேற்று காலமானார். என்டிடிவின் முன்னாள் பத்திரிகையாளரான இவர், உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பிரபல தொலைக்காட்சி தனியார் ஊடகமான என்டிடிவியின் துவக்கக் காலத்தில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர் வினோத் துவா. இவர் தொகுத்து வழங்கிய ’வினோத் துவா லைவ்’, ‘ஜைக்கா இந்தியா’ ஆகிய நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது. இதற்கு முன் அவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடத்தி வந்த ‘ஜனவானி’ நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இவர் தான் தேர்தல் சமயங்களில் கணிப்புகள், விவாதங்களை தொகுத்து வழங்கிய முதல் பத்திரிகையாளராகக் கருதப்படுகிறார்.

இதை அவர் தூர்தர்ஷனில் வழங்கிய போது அதன் உண்மைத்தன்மையையும் கருதி பொதுமக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இதற்காக துவாவிற்கு பத்மஸ்ரீ, ராம்நாத் கோயங்கா உள்ளிட்டப் பல விருதுகள் கிடைத்தன.

டெல்லியின் வீதிகளிலிருந்து வெளி மாநிலங்களின் பல பகுதிகள் வரை சமூகத்தின் நேரடி நடவடிக்கைளையும் நிகழ்ச்சியாகத் தொகுத்து வழங்கி இருந்தார். இவருக்கு மல்லிகா துவா, பக்குல் துவா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் மல்லிகா நடைச்சுவை நடிகையாகவும், பக்குல் மனநல மருத்துவராகவும் உள்ளனர். இவர்களாது தாயான ஊடுகதிர் மருத்துவர் பத்மாவதிக்கு கடந்த ஜூன் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டு காலமானார்.அப்போது முதல் வினோத் துவாவின் உடல்நலமும் நலிவடையத் துவங்கியதாக மகள் மல்லிகா தனது சமூகவலைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், டெல்லி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஐந்து நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு வினோத் துவா சிகிச்சை பெற்று வந்தார். இதில், அவர் நேற்று மாலை சுமார் 4.30 மணிக்கு இயற்கை எய்தியதாகவும் மகள் மல்லிகா தன் பதிவில் உறுதி செய்துள்ளார்.

வினோத் துவாவின் உடலுக்கு டெல்லியின் லோதி எஸ்டேட் பகுதியிலுள்ள மயானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது. சுமார் 42 ஆண்டுகள் பத்திரிகை துறையில் சிறந்த பணியாற்றியவரின் மறைவிற்கு பலரும் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்