ஒருவர் தடுப்பூசி செலுத்தியிருந்தாலோ அல்லது ஏற்கெனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டால் நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.
» கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்புடைய 500 பேர் கண்டுபிடிப்பு
» டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தான் தொழிற்சாலைகள்தான் காரணம்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு வாதம்
இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு எவ்வாறு இருக்கும், வேகமாகப் பரவுமா, உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்துமா என்பது குறித்து இதுவரை எந்த இறுதியான தகவலும் இல்லை. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
''உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். ஏனென்றால் டெல்டா வைரஸால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டார்கள் என்று செரோ சர்வே மூலம் தெரியவந்துள்ளது. 2-வதாகத் தடுப்பூசி செலுத்தும் வீதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒமைக்ரான் பாதிப்பின் வீரியம் இந்தியாவில் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இன்னும் வரவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவிவிட்டது. ஆனால், தொற்றின் அளவும், பரவல் வீதமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் டெல்டா வகை வைரஸ் மற்றும் முதல் அலையில் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். ஆதலால், ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் இருந்தாலும் அதன் வீரியம் குறைவாகவே இருக்கும்.
கரோனா வைரஸ் திரிபுகளை எதிர்த்துப் போரிடத் தடுப்பூசி முக்கிய ஆயுதம். ஒமைக்ரான் வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்படாமல் தடுக்கும் கேடயமாகத் தடுப்பூசி இருக்கும் என்பதால், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் கட்ட ஆய்வில் பரவல் வேகம் ஒமைக்ரானில் அதிகம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறதா அல்லது அதிலிருந்து தப்பிக்கிறதா என்பது தெரியவில்லை''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago