ஆந்திரா, தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 32% ஊதிய உயர்வு: அகர்வால் கமிட்டி பரிந்துரை

By என்.மகேஷ் குமார்

ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 29 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பி.கே. அகர்வால் கமிட்டி இரு அரசுகளுக்கும் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இரு மாநிலங்களிலும் பணியாற்றும் சுமார் 10,000 அரசு ஊழியர்கள் பயனடைவர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தற்போது தெலங்கானா, ஆந்திரா இரு மாநிலங்களாகப் பிரிந்துள்ளன. இரு மாநிலங் களில் பணியாற்றும் அரசு ஊழியர் களுக்கு 10-வது சம்பள பரிந்துரையின்படி 29 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்த பி.கே. அகர்வால் கமிட்டி இரு மாநில அரசுகளுக்கும் பரிந்துரை செய்து, மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனிடம் பரிந்துரை களை வழங்கியுள்ளது. 2000 பக்கங்கள் கொண்ட இந்தப் பரிந்துரைகளை இரு மாநில அரசுகளின் முதன்மை செயலா ளர் களிடம் ஆளுநர் வழங்கினார்.

இந்தப் பரிந்துரை குறித்து இரு மாநில அரசு முதல்வர்களும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைந்து முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி தற்காலிக அரசு ஊழியர்கள் தற்போது பெறும் அடிப்படை ஊதியம் ரூ. 6,700 ல் இருந்து ரூ. 13,000 ஆக உயரும்.

மேலும் பெண் ஊழியர்களின் பேறுகால விடுப்பை 2 ஆண்டுக ளாக அதிகரிக்கும் படியும் பி.கே. அகர்வால் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்