கடந்த 2010-ம் ஆண்டு புணேயில் நடத்தப்பட்ட ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஹிமாயத் பெய்க்கின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது மும்பை உயர் நீதிமன்றம்.
ஆனால் இந்திய வெடிபொருட்கள் சட்டத்தின் படி அவரது ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.எச்.பாட்டீல், எஸ்.பி.ஷுக்ரே ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மிர்சா இமாயத் பெய்க் (33) மீதான கொலை, கொலை முயற்சி, வெடிபொருட்களைக் கொண்டு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தன.
ஆனால் போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது நேரடி சாட்சிகள் இரண்டு தாங்கள் மிரட்டப்பட்டு வாக்குமூலம் கொடுக்க வைக்கப்பட்டதாகவும், எனவே புதிதாக வாக்குமூலம் பதிவு செய்யவும் மனு செய்திருந்தது, இதுதான் குற்றவாளி இமாயத் பெய்கிற்கு சாதகமாகத் திரும்பியது.
வழக்கு விவரம்:
புணேயில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஜெர்மன் பேக்கரியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் பலியாகினர், மேலும் 64 பேர் காயமடைந்தனர்.
இவ்வழக்கில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மிர்சா இமாயத் பெய்க் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு இமாயத் பெய்கிற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago