ராமர் கோயிலை தகர்ப்பதாக மிரட்டல் : அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடிவைத்து தகர்ப்பதாக தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உத்தரப்பிரதேசக் காவல்துறை சார்பில் அம்மாவட்டம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உ.பி.யின் அவசர உதவி எண் 112 இல் இன்று காலை ஒரு அழைப்பு வந்தது. இதில், பேசிய தன் பெயரை குறிப்பிடாமல் ஒரு மர்மநபர் பேசியுள்ளார்.

அதில், அவர் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடிவைத்து தகர்ப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கு முன்பும் உ.பி. காவல்துறைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.

தீவிரவாத அமைப்பான லஷ்கர்-எ-தொய்பா பெயரில் அனுப்பப்பட்டிருந்த அக்கடிதத்தில் உ.பி.யின் அயோத்தி, வாரணாசி, லக்னோ, கான்பூர், அலகாபாத் உள்ளிட்ட 46 ரயில் நிலையங்களில் வெடிவைத்து தகர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மீது உ.பி.யின் உளவுத்துறை சார்பிலும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வந்த தொலைபேசி அழைப்பிற்கு பின் அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்யா மாவட்டத்தின் மடங்கள், கோயில்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரயில்நிலையங்களிலும் ஆர்பிஎப் மற்றும் ஜிஆர்பிஎப் படையினர் மோப்பநாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்