தண்ணீர் தொட்டியில் வாலிபர் சடலம்: உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By என்.மகேஷ் குமார்

போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல்



ஹைதராபாத் உஸ்மானியா பல் கலைக்கழக வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று ஒரு வாலிபரின் சடலம் கிடந்தது. வேலை கிடைக்காத காரணத்தினால்தான் அவர் தற்கொலை செய்து கொண்ட தாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மாணவர்கள் கல்வீசித் தாக்கியதில் 7 போலீஸார் காயமடைந்தனர்.

உஸ்மானியா பல்கலைக்கழகம் ஆர்ப்பாட்டத்துக்கும், போராட்டங் களுக்கும் பிரசித்தி பெற்றது. தனி தெலங்கானா போராட்டம் இங்குதான் தீவிரமடைந்தது.

நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. அதைக் கண்ட மாணவர் சங்கத் தினர், வேலை கிடைக்காத காரணத் தினால்தான் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார் என போராட்டத்தில் குதித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்கு மாண வர்கள் ஒப்புக்கொள்ளாமல் சடலத் துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களுக்கும், போலீ ஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் போலீஸார் மீது கல் வீச்சில் ஈடு பட்டனர். இதில் 7 போலீஸார் காய மடைந்தனர். இதனை தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் விசாரணையில், இறந்த வாலிபர் மாணிக்கேஷ்வர் நகரை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் பாபா(29) என தெரிய வந்தது. கூலித் தொழிலாளியான அவர் இந்த கல்லூரி மாணவர் அல்ல என்றும், குடும்ப பிரச்சனை காரணமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்