ஒமைக்ரான் பயப்படும் அளவு மோசமாக இருக்காது: ஐசிஎம்ஆரின் முன்னாள் வைராலஜி இயக்குநர்

By செய்திப்பிரிவு

ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் மற்றும் வைராலஜியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனருமான மருத்துவர் டி.ஜேக்கப் ஜான் ''தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக்கொண்டால் பயப்படும் அளவு மோசமாக இருக்காது'' என்று தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கோவிட்-19 இன் புதிய உருமாற்ற வைரஸ், அதிக அளவு ஸ்பைக் பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் உலக நாடுகளைஅச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பின் தன்மைகள் குறித்து வைராலஜிஸ்ட் மற்றும் வைராலஜியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனருமான மருத்துவர் டி.ஜேக்கப் ஜான் கூறியதாவது:

ஒமைக்ரானில், 34 பிறழ்வுகள் காணப்படுகின்றன. இது ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா மற்றும் கவலைக்குரிய அனைத்து வகைகளையும் விட அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், கோவிட்-19க்கான பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக வேலை செய்யும் என்பதால் அந்த எளிதான தடையை நாம் உருவாக்கிவிட்டால் ஒமைக்ரான் மூன்றாவது அலையை விதைக்காது.

திருப்புமுனைத் தொற்றுகள்

புதிய உருமாற்ற வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்றுநோய் திருப்புமுனை நோய்த்தொற்றுகள் பொதுவானதாக இருக்கலாம். தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அது திருப்புமுனை தொற்று எனப்படும்.

இந்தத் திருப்புமுனை நோய்த்தொற்றுகள் பொதுவானதாகத் தெரிகிறது. இருப்பினும், அடிப்படை வைரஸ் ஒன்றுதான் மற்றும் பூஸ்டர் டோஸ்கள் மூலம் அடையக்கூடிய அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி, நோய்க்கு எதிராகவும் பரவும் தன்மைக்கு எதிராகவும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்,

இந்திய மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டாலும், மூன்றில் ஒரு பங்குதான் முடிந்துள்ளது.

அதிகரித்துள்ள நோய் எதிர்ப்பு சக்தி

கோவிட் நோய்தொற்றின் மிகப்பெரிய முதல் அலை எட்டு மாதங்கள் நீடித்தது, இது மக்கள்தொகையில் 30 சதவீதத்தை பாதித்திருக்கலாம். 12 வாரங்களில் 100க்கு 75-80 பேர் வரை பாதிக்கப்படும் அளவுக்கு வந்த கோவிட்டின் கொடிய இரண்டாவது அலை ஆகியவற்றால் இந்தியாவின் மக்கள் நன்கு நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளனர். மீதியின் சதவீதம், மேலும் இந்த எண்களுக்குள் பல மறு தொற்றுகள் ஏற்பட்டன.

இந்தப் பின்னணியில், நம் நாட்டில் உருமாற்றம் நுழைந்து வெகுதூரம் பரவினால் என்ன நடக்கும் என்பது யூகிக்க முடியாதது. ஆனால் மக்கள் பயப்படுவது போல் நிச்சயம் இது மோசமாக இருக்காது.

மூன்றாவது அலையை விதைக்காமல் இருக்கலாம். இருப்பினும், இறக்குமதியைத் தவிர்த்து, உருமாற்ற வைரஸின் நோய்த்தொற்றுக்கெதிராக நம்மை வலுப்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனமான போக்காகும்.

மக்கள்தொகை நோய் எதிர்ப்பு சக்தி (பிரபலமாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது) அதாவது இரண்டு விஷயங்கள் இதில் உள்ளன. ''தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுங்கள்'' மற்றும் ''இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்குங்கள்'' என்பதுதான்.

ஒமைக்ரானை பூஸ்டர் டோஸ்களை செலுத்தி புதிய உருமாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக "நம்மால் உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும். தடுப்பூசிகளே ஒமைக்ரானுக்கு எதிரான எளிதான தடையாகும்.

தடுப்பூசியின் அவசியம்

மேலும், தடுப்பூசியின்அவசியம் நாம் உணர வேண்டும். முதல் தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுவரை முதல் தடுப்பூசியே பெறாத நிலையில் உள்ள குழந்தைகள் உட்பட மற்ற அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் கர்ப்ப காலத்தின்போது எவ்வளவு சீக்கிரம் வாய்ப்புள்ளதோ அவ்வளவு விரைவாக இரண்டு தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். அடுத்த கர்ப்ப காலத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

புதிய உருமாற்றப் பரவுதல் என்பதில், அசல் வைரஸ் பரவும் நிலை அடிப்படை, நிலை 1 என எடுத்துக் கொண்டால், டெல்டா இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாகவும், ஒமைக்ரான் இன்னும் அதிகமாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு விஞ்ஞானி ஒமைக்ரானின் பாதிப்பு 10 மடங்கு அதிகமாக நினைக்கிறார்.

ஒமைக்ரான் திறமையான டிரான்ஸ்மிட்டர்

ஒமைக்ரான் பாதிப்புகள் எப்படியிருக்கும் என்பதை ஓரளவுக்காவது அனுமானிக்க முடியும். அதாவது, டெல்டாவை ஒமைக்ரானுடன் ஒப்பிடுகையில், பிந்தையது மிகவும் திறமையான டிரான்ஸ்மிட்டர், இரண்டு டோஸ் தடுப்பூசிகளில் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையே எதிர்க்கக்கூடியது, எனினும் டெல்டாவை விட அதிக வீரியம் அல்லது கடுமையான நோயை ஒமைக்ரான் ஏற்படுத்தாது.

மிகவும் திறமையான டிரான்ஸ்மிட்டர் என்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் காரணமாக உருவாகியுள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு கொஞ்சம் அதிக எதிர்ப்பாகவே இருக்கும் அவ்வளவுதான்.
.
இவ்வாறு வைராஜிஸ்ட் மருத்துவர் டி.ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்