குதுப்மினார் உள்ளே அமைந்த மசூதியில் சிலை வைத்து இந்துக்கள் வழிபட உரிமை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் மெஹரோலியில் வரலாற்றுச் சுற்றுலா தலமாக அமைந்திருப்பது குதுப்மினார். இது, டெல்லி சுல்தான் வம்சத்தின் முதல் மன்னரான குத்புதீன் ஐபக்கால் 1198 இல் கட்டப்பட்டது.
மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதன் நுழைவு வாயிலில் ’கவ்வத்தூல் இஸ்லாம்’ எனும் பெயரிலான மசூதி அமைந்துள்ளது. இதில், முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இதன் மீது இந்து மடத்தின் தீர்த்தங்கர் ரிஷப் தேவ் எனும் சாதுவால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 2020 இல் மனு அளிக்கப்பட்டிருந்தது. இம்மனுவில், கவ்வத்துல் இஸ்லாம் மசூதியினுள், இந்துக் கடவுள்களின் சிலைகளை வைத்து பூஜிக்க உரிமை கோரபட்டிருந்தது.
» பிரதமர் மோடியுடன் தேவகவுடா திடீர் சந்திப்பு: புகைப்படங்கள் வெளியீடு
» மழலையர் முதல் 12-ம் வகுப்பு வரை கல்வியில் ஆயுஷ் பாடம்: மத்திய அரசு முடிவு
இதற்கு டெல்லி சுல்தானான முகம்மது கோரியால் குதுப்மினார் வளாகத்திலிருந்த ஜெயின் மற்றும் இந்து கோயில்களின் இடிபாடுகள் மீது மசூதி கட்டியதாகக் காரணம் கூறப்பட்டிருந்தது.
இதில், மத்திய கலாச்சாரத்துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தினர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இம்மனுவை டெல்லியின் பொது அமைப்பான நீதிக்கான சட்ட நடவடிக்கை எனும் அறக்கட்டளை எதிர்த்து மனு அளித்திருந்தது.
தனது மனுவில், மத்திய அரசின் 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இச்சட்டம் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவால், சுதந்திரத்திற்கு முன்பிருந்து நடைபெற்ற அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் மீதான வழக்கால் இயற்றப்பட்டது.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மத வழிப்பாட்டுத்தலங்கள் சுதந்திரத்திற்கு பிறகு இருந்த நிலை தொடரும் எனவும் அதில் மாற்றங்கள் செய்யவோ, பிறமதத்தினர் உரிமை கோரவோ முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டெல்லியின் அறக்கட்டளை தனது மனுவில் இந்திய தொல்பொருள் சட்டம் 1904 மற்றும் 1948 ஆகியவற்றின் பிரிவு 39 சுட்டிக் காட்டியிருந்தது. கடந்த 800 வருடங்களாக குதுப்மினாரினுள் முஸ்லிம்கள் தவிர வேறு மதத்தினர் வழிபட்டது இல்லை என்றும் குறிப்பிட்டப்பட்டிருந்தது.
மேலும், இந்திய தொல்பொருள் ஆய்கவம் சட்டம் இயற்றி குதுப்மினாரை தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த 104 வருடங்களுக்கு பின் முதன்முறையாக தொடுக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த வாதங்களை ஏற்ற நீதிமன்றம், தீர்த்தங்கர் ரிஷப் தேவ் மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, நீதிக்கான சட்ட நடவடிக்கை அறக்கட்டளையின் தலைவரான முகம்மது அசத் ஹயாத், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அன்வர் சித்திக்கீ சார்பில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்திடமும் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தீர்த்தங்கர் ரிஷப் தேவ் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டிருந்தது. இதுபோல், இந்து அமைப்புகள் குதுப்மினாரில் உரிமையை கோருவது முதன்முறையல்ல.
இதற்கு முன் நவம்பர் 14, 2000 ஆண்டில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பினர் குதுப்மினாரை புனிதப்படுத்த யாகம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதற்கு, குதுப்மினாரின் கட்டிடங்களில் ஜெயின் மற்றும் இந்து கோயில்களின் சிற்பங்கள் இடம்பெற்றிருப்பதாகக் காரணம் கூறியிருந்தனர். அனுமதியின்றி யாகம் நடத்த முயன்றதாக 80 பேர் கைது செய்யப்பட்டு யாகத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago