தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் 30 முறை உருமாறியுள்ளதால், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டதாக தகவல் கிடைத்திருக்கிறது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவும் தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், போத்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எச்சரிக்கை பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தி நிறுவனத்துக்கு ஓமைக்ரான் வகை வைரஸ் குறித்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஓமைக்ரான் வகை வைரஸ் குறித்து மிகுந்த விழிப்பாக இருக்க வேண்டும். சர்வேச பயணிகளையும், உள்நாட்டில் பல்ேவறு இடங்களுக்கு செல்லும் பயணிகள், நபர்கள் குறித்து கூடுதல் விழிப்புணர்வுடன், கண்காணிப்புடன் இருப்பது அவசியம் இல்லாவிட்டால் கரோனா தொற்று திடீரென அதிகரித்துவிடும்.
தென் ஆப்பிரி்க்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமைக்ரான் வகை வைரஸ், மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டவை.அதாவது தடுப்பூசியையும் எதிர்க்கும் அளவுக்கு வைரஸின் ஸ்பைக் புரதத்தில்30 உருமாற்றங்கள் நடந்துள்ளன. பெரும்பாலான தடுப்பூசிகள், ஸ்பைக் புரதத்துக்கு எதிராகவே நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குகின்றன. ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் அதிகமான உருமாற்றங்கள் தடுப்பூசியின் செயல்திறனைக் குறைத்துவிடும்.
தடுப்பூசிகளின் செயல்திறன் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும் அதன் செயல்திறனை ஓமைக்ரான் வைரஸுக்கு எதிராக மறுமதிப்பீடு செய்வது அவசியம். ஓமைக்ரான் வைரஸ் பரவல், தடுப்பூசியை எதிர்க்கும் திறன், தீவிரத்தன்மை ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள்தான் எதிர்காலச் செயல்பாட்டை தீர்மானிக்கும்.
மூன்றாவது அலை குறித்து இப்போதே பேசுவது கூடாது அதற்கான சூழலும் இந்தியாவில் இல்லை. ஆனால், மக்கள் மத்தியில் சில மாதங்களாக கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் ஒருவிதமான கவனக்குறைவு தெரிகிறது. இந்த நேரத்தில் கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றை முறைப்படி செய்வது அவசியம்.
இவ்வாறு குலேரியா தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago