நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதை உணர்ந்த பிரதமர் மோடி இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதன்படி 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டது.
குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் முதல்நாளிலேயே, இந்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இதனால், எதிர்க்கட்சிகள், பாஜக ஆகியவை தங்கள் எம்.பி.க்களை அவைக்கு தவறாமல் ஆஜராக உத்தரவிட்டுள்ளன.
» இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை;இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை: மோகன் பாகவத் பேச்சு
இந்தக் கூட்டத் தொடரில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டஅங்கீகாரம் வழங்க எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் உயிரிழந்த விவாயிகளுக்கு இரங்கல் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் இந்த கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. இதில் 3 அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, சில தனியார் கிரிப்டோகரன்சிக்கள் தடை செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரபூர்வ கிரிப்டோகரன்சிகள் கொண்டுவர அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்படும்.
அவசரச்சட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட. போதை மருந்து தடுப்பு, மத்திய ஊழல் தடுப்பு திருத்தச்சட்டம், டெல்லி சிறப்பு போலீஸ் உருவாக்கம் ஆகியவற்றுக்கான அவசரச் சட்டங்களுக்கு பதிலாக சட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால், அதையொட்டி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் திருத்தச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய திருத்த மசோதா 2021 நிறைவேற்றப்பட உள்ளது.
இது தவிர திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு மசோதா, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற ஊதியத்தில் திருத்தச்சட்டம் உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன.
குடியேற்றச் சட்டம் 1983 மாற்றப்பட்டு புதிதாக குடியேறற மசோதா 2021 கொண்டுவரப்படஉள்ளது.
குடியேற்றத்தில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அடங்கியதாக இந்த மசோதா இருக்கும். மனிதக் கடத்தலைத் தடுத்தல், பாதுகாத்தல், மறுவாழ்வு திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் கடத்தல் செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும், பாதி்க்கப்படுவோருக்கு போதுமான பாதுகாப்பு, மறுவாழ்வு நடவடிக்கைளை வலியுறுத்தும் விதமாகவும் அவர்களுக்கு சட்டரீதியான உதவிகள், உரிமைகள் நிலைநாட்டவும் மசோதாவி்ல் அம்சங்கள் இருக்கும்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago