இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை;இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை: மோகன் பாகவத் பேச்சு

By ஏஎன்ஐ


இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை, இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்துக்கள் இல்லாமல் இந்தியா கிடையாது, இந்தியா இல்லாமல் இந்துக்களும் இல்லை. இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது. இந்தியா சுயமாக நிற்கிறது, இதுதான் இந்துத்துவாவின் சாரம்ஸம். இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தியா இந்துக்களின்தேசமாகஇருக்கிறது.

சுதந்திரத்தின்போது நடந்த தேசப்பிரிவினைக்குப்பின், இந்தியா உடைந்து, பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. இந்தியா தேசப்பிரிவினையின்போது பாதிக்கப்பட்டதை மறந்துவிடக்கூடாது. இந்தப் பிரிவினை நடக்காமல் இருந்தால் இந்த வலிபோயிருக்கும்.

நாம் இந்துக்கள் என்ற சிந்தனையை மறந்ததால்தான் இந்த தேசப்பிரிவினை நடந்தது. முஸ்லி்ம்கள்கூட இதை மறந்துவிட்டார்கள். இந்துக்கள் என்று தங்களை நினைக்ககூடியவர்களின் வலிமை முதலில் குறைந்துவிட்டது, பிறகு எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதனால்தான், இதனால்தான் பாகிஸ்தான் இந்தியாவாக இல்லை.

இந்துக்களின் எண்ணிக்கையும், வலிமையும், பலமும் குறைந்துவருவதைப் பார்க்கலாம் அல்லது இந்து என்ற உணர்வு குறைந்துவருவதைப் பார்க்கலாம். இந்துக்கள் தங்களை இந்துவாக இருக்க வேண்டுமென்றால், பாரதம் அகண்டபாரதமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்