இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 121.06 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73,58,017 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 121.06 கோடியைக் (1,21,06,58,262) கடந்தது. 1,25,40,268 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 10,967 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,88,797 ஆக அதிகரித்துள்ளது.
» நடுகடலில் 2 கப்பல்கள் மோதி விபத்து: நேவிகேட்டர் தவறு என விசாரணையில் தகவல்
» நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் ஒத்திவைப்பு: விவசாயிகள் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.34 சதவீதமாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 152 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,07,019 ஆக உள்ளது; நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.31 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 9,69,354 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 63.82 கோடி கோவிட் பரிசோதனைகள் (63,82,47,889) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 13 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.88 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.86 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து 89 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 54 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago