இந்தியாவில் புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் எதுவும் இல்லை: மத்திய சுகாதாரத்துறை 

By ஏஎன்ஐ

இந்தியாவில் இதுவரை புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனை அடுத்து மத்திய அரசு, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாகச் சோதித்து, நோயறிந்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஓர் ஆலோசனையை வழங்கியது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்ட புதிய கோவிட் -19 மாறுபாடு நோய்த்தொற்று எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய மாறுபாட்டைக் கண்டறிந்ததாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் பிறழ்வுகள் பற்றி இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகளின்படி பொது சுகாதாரத்தைப் பாதிக்கும் தீவிரத் தாக்கங்களை அந்த வைரஸ் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த மாறுபாடு வைரஸ் கணிசமாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது,

இந்தியாவில் பதிவாகவில்லை

இதனை அடுத்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற ஆபத்தில் கடுமையான நோய்த்தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேசப் பயணிகளை கடுமையாகச் சோதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், ஏதாவது பாதிப்புகள் இருந்தால் நோயறிந்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஓர் ஆலோசனையை வழங்கியது.

சமீபத்தில் விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மற்றும் சர்வதேச பயணத்தைத் திறப்பதன் மூலம் இதனால் நாட்டிற்கு கடுமையான பொது சுகாதார தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நடந்த சோதனைகளில் புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் நோய்த்தொற்று எதுவும் இதுவரை பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது.

தடுப்பூசி திறனைக்குறைக்கும் கோவிட் மாறுபாடு

வெள்ளிக்கிழமை, பிரிட்டன் அரசின் சுகாதாரப் பாதுகாப்பு ஏஜென்சி, புபுதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் ஸ்பைக் புரோட்டீன் இருப்பதாகக் கூறியது, இது கோவிட்-19 தடுப்பூசிகளை அடிப்படையாகக் கொண்ட அசல் கரோனா வைரஸில் இருந்து வியத்தகு முறையில் வேறுபட்டது. மேலும் இது ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைத்துவிடும் கடும் தாக்கம் கொண்டது.

ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமானங்கள் வருகையை பிரிட்டன் தடை செய்துள்ளதோடு ஆப்பிரிகாவிலிருந்து வருகை தந்துள்ள பிரிட்டன் பயணிகளை தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்