நாடாளுமன்றத்தில் மைய அரங்கில் இன்று நடக்கும் அரசியலமைப்புச் சட்ட நாள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளாக கடந்த 2015ம் ஆண்டிலிருந்து நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்புச்சட்ட நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயாடு, பிரதமர் மோடி,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.
அரசியலமைப்புச்சட்ட உருவாக்கத்தின்போது நடந்த விவாதங்கள், அரசியலமைப்புச் சட்டம் குறித்த புகைப்படங்கள், அரசியலமைப்புச்சட்டத்தின் தொகுப்பு ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிடுகிறார்.
அதுடம்டுமல்லாமல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் அரசியலமைப்பு ஜனநாயகம் என்ற வினாடிவினாப் போட்டியையும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். மாலை 5.30 மணிக்கு விஞ்ஞான் பவனில் உச்ச நீதிமன்றம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இரு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், சொலிசிட்டர் ஜெனரல்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்
ஆனால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இன்று நடக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று திமுக, சிவசேனா, ஆர்எஸ்பி, என்சிபி, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜேஎம்எம், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் புறக்கணிக்கும் எனத் தெரிகிறது.
அதேசமயம், பிஜு ஜனதா தளம், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிஸ், தெலுங்குதேசம் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த கட்சிகளின் எம்.பி.க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago