அரசியலமைப்பு தினம்: குடியரசுத் தலைவர் தலைமையில் நாளை கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் நாளை நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படவுள்ளது.

குடியரசுத் தலைவர் காலை 11 மணிக்கு இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத்தலைவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

குடியரசுத் தலைவரின் உரைக்குப்,பின் அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவருடன் நேரலையில் படிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் ‘அரசியலமைப்பு ஜனநாயகம்’ குறித்த இணையவழி வினாடிவினாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைப்பார்.

அரசியலமைப்பின் முன்னுரையை 23 மொழிகளில் (22 அதிகாரப்பூர்வ மற்றும் ஆங்கிலம்) வாசிப்பது தொடர்பான இணைய போர்டல் இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருக்கும். அரசியலமைப்பின் முன்னுரை படித்தல் மற்றும் வினாடிவினா குறித்த சான்றிதழ்களை mpa.gov.in/constitution-day என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்