மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.
விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, இந்த 3 சட்டங்களையும் உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவித்தார்.
வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
» ஒவைசிக்கும், ஜின்னா மனநிலைக்கும் எந்த வேறுபாடும் இல்லை: பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி விமர்சனம்
» உ.பி.யில் அமைகிறது 5-வது சர்வதேச விமான நிலையம்: நாளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 29-ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்த தொடர் தொடங்க இருப்பதால், அதில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையொப்பமிட்டபின், முறைப்படி இந்த 3 சட்டங்களும் திரும்பப்பெறப்பட்டதாக அரசாணை வெளியிடப்படும்.
இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்ப ப்பெறும் மசோதாக்கள் உள்ளிட்ட 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago