ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி மத்திய மாவட்ட போலீஸ் கமிஷனர் கூறுகையில், "கவுதம் காம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து இ மெயில் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனால், அவர் வீட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
கவுதம் காம்பீர் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளை வெளியிடுவது அவரது வழக்கம். சில நேரங்களில் அது சர்ச்சையாகிவிடுவதும் உண்டு. இந்நிலையில், அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.
» இந்தியாவில் 9,283 பேருக்கு கரோனா: 437 பேர் உயிரிழந்தனர்
» முதல்முறையாக லக்னோ வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago