வங்ககடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த சில நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக 25-ம் தேதி முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கீழ் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது.
இது அடுத்த 4-5 நாட்களில்மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது.
» கோவிட் தடுப்பூசி; தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புகளை ஈடுபடுத்துங்கள்: மாண்டவியா
» ‘‘போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை; வீட்டிற்கு செல்ல மாட்டோம்’’- டிகைத் திட்டவட்டம்
முன்னெச்சரிக்கை:
கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே மற்றும் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மற்றும் மிகவும் பரவலாக மழை பெய்யும்.
அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, கேரளா & மாஹேயில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேசமயம் அடுத்த 2 நாட்களில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மற்றும் வடக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் குளிர் அலை வீசுவதற்கு மிகவும் சாத்தியம் உள்ளது. அதன் பிறகு குறையும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago