புதிய எல்லைப் பாதுகாப்புப் படைச் சட்டத்தின் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று மோடியிடம் பேசுவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் 11 அன்று சர்வதேச எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டராக அதிகரித்து சட்டம் திருத்தப்படுவதாக அறிவித்தது.
இதற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் (BSF) சட்டத்திற்கு எதிராக அதன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அனைத்து இந்திய மாநிலங்களிலும் உள்ள அண்டை நாடுகளின் எல்லைகளிலேயே வங்கதேசத்தினுடனான சர்வதேச எல்லை மிக நீளமானது ஆகும். வங்கதேசத்துடன் எல்லையில் உள்ள பாஜக ஆளும் அசாம் இந்த சட்டத்திருத்தத்திற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
» ஜனவரியில் இருந்து இணை நோய் உள்ள இந்தியக் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு
» வெளிநாட்டு மதுபானங்கள்; இறக்குமதி வரி 50 சதவீதம் குறைப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
நவம்பர் 17 அன்று, மேற்குவங்க சட்டப்பேரவையில் பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை நீட்டித்த மத்திய அரசின் அக்டோபர் 11 உத்தரவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
விமான நிலையத்தில் பேட்டி
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திங்கள் அன்று 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக புதுடெல்லி சென்றுள்ளார்.
டெல்லி செல்லும் பிற்பகல் விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக அவர் கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது, வங்கதேசத்துடனான சர்வதேச எல்லையில் இருந்து 15 முதல் 50 கிமீ வரை மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பை நீட்டிக்க கடும் ஆட்சேபனையை எழுப்புவேன் என்றார். அவர்கள் (மையம்) எங்களைக் கட்டுப்படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். சட்டம் ஒழுங்கு என்பது மாநிலம் தொடர்பானது. எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தின் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது, ஆனால் எங்கள் பகுதிகளை கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டோம். பாஜக தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது,
திரிபுராவில் தாக்குதல்
பிரதமருடனான சந்திப்பில், மேற்குவங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளையும் எழுப்புவேன். திரிபுராவில் நவம்பர் 25 ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புத் தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சித் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கவலை அளிப்பதாக உள்ளது. பாஜக ஆளும் திரிபுராவில் ஜனநாயகம் இல்லை. இது தேர்தல் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்து. திரிபுரா பற்றி எரிகிறது. எங்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சயோனி கோஷ் நேற்று கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
எங்கள் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்குள் இரண்டு முறை தாக்கப்பட்டனர். தேசிய மனித உரிமை ஆணையம் இப்போது எங்கே இருக்கிறது? டெல்லியை அடைந்த பிறகு, அமித்ஷா அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தும் எனது நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பேன். மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
நான் போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன், ஆனால் எங்கள் எம்.பி.க்களுக்கு ஆதரவை மட்டுமே தெரிவிக்கிறேன். அவர்கள் ஷாவின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்த விரும்பினர் ஆனால் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு நான் அவர்களை நிறுத்தினேன். அவர் (ஷா) பாஜக தலைவர் ஆனால் அவர் உள்துறை அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவருடன் பேச எங்களுக்கு உரிமை உள்ளது.
விசாரணை எதுவும் இல்லையா?
திரிபுராவில் திரிணமூல் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது, இதற்கு என்ன விசாரணை நடக்கிறது. ஆனால் மேற்குவங்கத் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் மீதான தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை உடனே நடந்தது. உண்மையில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்க பிரச்சாரம் செய்யவந்த எந்த பாஜக தலைவரையும் நாங்கள் தடுக்கவில்லை. ஜே பி நட்டாவின் கான்வாய் சம்பந்தப்பட்ட ஒரு சிறிய சம்பவம் நடந்தது மற்றும் அனைத்து ஆணையங்களும் மேற்கு வங்கத்திற்கு வந்தன.
சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிராக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன. திரிபுராவில் நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவைக் கூட அவர்கள் (பாஜக) பின்பற்றாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாஜக.,வுக்கு பயம். ஆனால் அது இறுதியில் தோற்கடிக்கப்படும். திரிபுரா வன்முறை விவகாரத்தில் நீதி கேட்பது என்பது திரிபுராவோடு முடிந்துவிடுவதில்லை. இது மும்பை, டெல்லி மற்றும் இந்தியா முழுவதும் எழுப்பப்படும்.''
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago