6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு விவசாயிகள் அமைப்பு கடிதம்: மகா பஞ்சாயத்தில் எம்எஸ்பி குறித்து முடிவு

By ஏஎன்ஐ

மத்திய அமைச்சர் ஆஷிஸ் மிஸ்ராவைக் கைது செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) கடிதம் எழுதியுள்ளது.

லக்னோவில் இன்று நடக்கும் மகா பஞ்சாயத்தில் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதேநேரம், வரும் 29-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என விவசாய அமைப்புகள் தெரிவித்தன.

பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தமைக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால், 11 சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும், நீங்கள் இருதரப்பு தீர்வுக்குப் பதிலாக ஒரு தரப்பு அறிவிப்பையே தேர்ந்தெடுத்தீர்கள். நாங்கள் உங்கள் முன் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

விவசாயிகள் இப்போது வீட்டுக்குச் செல்லலாம் என்று பிரதமராகிய நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். நாங்கள் உங்களிடம் இருந்து உறுதி கேட்கிறோம், நாங்கள் தெருவில் அமரமாட்டோம். மற்ற விஷயங்களுக்கு விரைவாகத் தீர்வு கண்டபின் நாங்களும் வீட்டுக்குச் செல்லவும், குடும்பத்தினரைக் காணவும், விவசாயம் செய்யவும் எங்களுக்கும்கூட ஆசையாக இருக்கிறது.

உங்களுக்கும் விருப்பம் இருந்தால், மீண்டும் பேச்சுவார்த்தையை 6 கோரிக்கைகளுக்காக எஸ்கேம் அமைப்புடன் தொடங்கிடுங்கள். அதுவரை எஸ்கேஎம் அமைப்பு போராட்டத்தைத் தொடரும்''.

இவ்வாறு கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் அமைப்பின் மூத்த தலைவர் பல்பிர் சிங் ராஜேவால் கூறுகையில், “வரும் 27-ம் தேதி எஸ்கேஎம் அமைப்பு மீண்டும் கூடுகிறது. அப்போது, எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்தும் பேசுவோம். 22-ம் தேதி நடக்கும் கிசான் பஞ்சாயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்