ஆந்திராவில் கன மழைக்கு இதுவரை 43 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஜெகன்மோகன் ஹெலிகாப்டரில் ஆய்வு

By என். மகேஷ்குமார்

வங்கக் கடலில்உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னை அருகே நேற்று முன்தினம் அதிகாலை கரை கடந்தது. இதனால் ஆந்திர மாநிலத்தில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர், பிரகாசம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் 5 மாவட்டங்களும் வெள்ளக் காடாக மாறியுள்ளன.

திருப்பதியில் கல்யாணி அணைநிரம்பியதால் 2 மதகுகளில்தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ராயல செருவு ஏரிக்கும் உபரி நீர்போய் சேர்ந்தது. இதன் காரணமாக திருப்பதியின் மிகப்பெரியஏரியான ராயல்செருவு எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற அபாய நிலைக்குநேற்று மாலைவந்தது. இதையடுத்து ஏரியைசுற்றியுள்ள கிராம மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.இந்த ஏரி உடைந்தால் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் பயிர்சேதமும் மிக அதிகமாகும் என்ப தால் அதிகாரிகள்மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பதி நகரில் பெரும்பாலானஇடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.

நெல்லூர், கடப்பா, அனந்தபூர், பிரகாசம் மாவட்டங்களிலும் கன மழையால் ஆயிரக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பலர், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் குடும்பத்தாரை காணவில்லை என காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை43 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது. இதில் கடப்பா மாவட்டம், சேயேரு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் கார்த்திகை தீபம்ஏற்றச் சென்ற2 கிராம மக்களில் 26 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே ஆந்திரமுதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி நேற்றுகாலை ஹெலிகாப்டர்மூலம் சித்தூர், நெல்லூர், கடப்பா, பிரகாசம்,அனந்தபூர்ஆகிய 5 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

3 அடுக்கு மாடி

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரியில் உள்ள பழைய சேர்மேன் தெருவில், கனமழைக்கு, கட்டுமானத்தில் உள்ள 3 அடுக்கு மாடி திடீரென நேற்று காலை இடிந்து பக்கத்தில் இருந்த 2 அடுக்கு மாடி மீது விழுந்தது. இதில் 2 அடுக்கு மாடியில் குடியிருந்த சுமார் 15 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 3 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்வதால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE