3 விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று, உண்மை, நீதி, அகிம்சை வெற்றி பெற்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவி்ததார். அவர் கூறிகையில் "விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று பேசினார்.
இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:
விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. 3 விவசாயச் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
நீதிக்கான இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது. இன்று, உண்மை, நீதி, அகிம்சை வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயகத்தை மீட்டெடுக்க விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தந்தன. ஒட்டுமொத்த முயற்சி இன்று வென்றுள்ளது. ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago