அமலாக்கப் பிரிவு இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா இன்றுடன் (18-ம் தேதி) ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தின்படி, அமலாக்கப் பிரிவு, சிபிஐ இயக்குநர்கள் பதவிக் காலம் 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்தின் அடிப்படையில் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்குப் பதவி நீட்டிக்கப்பட்டது
சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக் காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் திருத்தச் சட்டம் (2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருக்கும் 1984-ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான மிஸ்ராவின் பதவிக் காலம் 18-ம் தேதியோடு (இன்று) முடிகிறது. 18-ம் தேதிக்குப் பின் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி மிஸ்ராவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மிஸ்ரா 2022-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதிவரை அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை பதவியில் இருப்பார்.
சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்களுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த அவசரச் சட்டம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
இந்தச் சூழலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. மஹூமா மொய்த்ரா இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago