சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கான பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த அவசரச்சட்டத்தை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய ஊழல்தடுப்பு ஆணையம் திருத்தச்சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
சிபிஐ, அமலாகாகப்பிரிவு இயக்குநர்களுக்கு பதவிநீட்டிப்பு வழங்கி பிறப்பித்த அவசரச் சட்டம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
» முதன்முறை சாதனை; 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை உயர்வு: மன்சுக் மாண்டவியா பெருமிதம்
இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. மஹூமா மொய்த்ரா இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து எம்.பி. மஹூமா மொய்த்ரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அ ரசு கொண்டு வந்த அவசரச்சட்டம், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது. ஆதலால், உச்ச நீதிமன்றத்தில் அவசரச்சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யபப்பட்டுள்ள 2-வது மனு இதுவாகும்.
வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த அவசரச்சட்டத்தை எதிர்த்து செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த 2018ம் ஆண்டு அமலாகக்ப்பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்ட மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago