7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை: மத்திய அரசு ரூ.6,466 கோடி ஒதுக்கீடு

ஐந்து மாநிலங்களில் 44 மாவட்டங்களில் சேவை கிடைக்கப் பெறாத 7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க ரூ.6,466 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா , ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு உட்பட்ட இதுவரை செல்போன் சேவை கிடைக்கபெறாத கிராமங்களுக்கு அந்த சேவையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் 7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க, ஐந்தாண்டுகளுக்கான செயல்பாட்டு செலவு உட்பட ரூ.6,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களில் 4ஜி செல்போன் சேவை வழங்குவதற்கான பணிகள், திறந்தவெளி போட்டி மூலம், உலகளாவிய சேவை உதவி நிதியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படவுள்ளது.

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தொலைதூர மற்றும் சேவை கிடைக்கப்பெறாத சிக்கலான கிராமங்களில் செல்போன் சேவை வழங்குவதற்கான இந்த புதிய திட்டம், தற்சார்புக்கான டிஜிட்டல் இணைப்பு வசதியை மேம்படுத்தவும், கல்வி கற்கவும், தகவல்கள் மற்றும் அறிவாற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.

இதுபோலவே திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, மின்னணு ஆளுகை முயற்சிகள், புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கும், மின்னணு வர்த்தகத்திற்கும் உதவிகரமாக அமைவதுடன், கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளவும், வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியாவின் குறிக்கோள்களை நிறைவேற்றவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்