மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக வரும் இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயிலின் மேல்சாந்தி, மாலிகபுரம் கோயில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தினார்.
முன்னதாக, சபரிமலையில் தினமும் 30,000 பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் வரும் இந்த சீசனுக்கு கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள்.
» மதுவிலக்கு அமலுக்குப் பிறகு பிஹாரில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன: நிதிஷ் குமார் பெருமிதம்
கரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனத்துக்கு வரும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தியிருத்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:
* மலையேறி வரும் போது ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு வர வேண்டும்.
* வாய் மற்றும் மூக்கை மறைக்கும் வண்ணம் முககவசம் அணிய வேண்டும்.
* பயன்படுத்திய முககவசம், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை கவனக்குறைவாக அப்புறப்படுத்தக்கூடாது
* ஷேண்ட் வாஷ், அடிக்கடி பயன்படுத்த வைத்திருக்க வேண்டும்
* காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் யாத்திரையை தவிர்க்க வேண்டும்
* கோவிட்-19 நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மலையேற்றத்தின் போது தீவிர சுவாசம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* அவர்கள் யாத்திரைக்கு செல்வதற்கு முன் இதய மற்றும் நுரையீரல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
* சுத்தமான தண்ணீரை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* யாத்ரீகர்களுடன் வரும் டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் சமையல்காரர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.
* ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் ஐந்து சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டன.
பக்தர்கள் சன்னதிக்கு ஏறுவதற்கு முன்பு பம்பை நதியில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago