சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த இந்த அவசரச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய ஊழல்தடுப்பு ஆணையம் திருத்தச்சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
» பசுவின் கோமியம், சாணம் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்: சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
கூட்டத்தொடரில் அவசரச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரும். 6 வாரங்களுக்குள் சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் அவசரச்சட்டம் செல்லுபடியாகாது.
தற்போது சிபிஐ அமைப்பின் இயக்குநராக 1985்ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.
அதேபோல அமலாக்கப்பிரிவு இயக்குநராக இருக்கும் ஐஆர்எஸ் அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018 நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டு, அவரின் பதவிக்காலம் முடிந்தபின் மேலும்ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டார் அவரின் பதவிக்காலம் அடுத்தவாரம் முடியும் நிலையில் இந்த அவசரச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்என் ராவ் தலைமையிலான அமர்வு, அமலாக்கப்பிரிவு இயக்குநர் எஸ்கே.மிஸ்ரா பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான வழக்கில், கூறுகையில், “ பதவிக்காலம் நீ்ட்டிப்பு என்பது அரிதான காரணங்கள், விதிவிலக்கான சூழல்களில்மட்டும்தான் நீட்டிப்பு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago