7 ஆண்டுகளில் டிஜிட்டல் பரிமாற்றம் 19 மடங்கு உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

7 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிச் சேவை நாட்டில் உள்ள சாமான்ய மக்கள், ஏழைக்குடும்பங்கள் எளிதில் அணுக முடியாததாக இருந்தது என பிரதமர் மோடி கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இரண்டு புதிய கண்டுபிடிப்பு முன்முயற்சிகளை, அதாவது நேரடி சிறு முதலீட்டுத் திட்டம், ரிசர்வ் வங்கியின் ஒருங்கினைக்கப்பட்ட குறைதீர்ப்புத் திட்டம் ஆகியவற்றை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:

75-வது ஆண்டுப் பெருவிழா காலமும் 21-ம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு காலமும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவமானவையாகும். இத்தகைய சூழலில், ஆர்பிஐயின் பங்கும் மிகப்பெரியதாகும். நாட்டின் எதிர்பார்ப்புகளை ஆர்பிஐ அணி நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்.

இன்று தொடங்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்கள் நாட்டில் முதலீட்டு வாய்ப்பை இந்தத் திட்டங்கள் விரிவுபடுத்தும். மூலதனச் சந்தைகளை எளிதாகவும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும்..

நேரடி சிறு முதலீட்டுத் திட்டம், அரசு பங்குப் பத்திரங்களில் பாதுகாப்பான முதலீட்டு வழியாகவும் நாட்டின் சிறு முதலீட்டாளர்களுக்கு எளிதானதாகவும் இருக்கும். இதேபோல், ஒரே தேசம், ஒரே குறைதீர்ப்பு முறை என்பது இன்று ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டத்தால் வங்கித் துறையில் புதிய வடிவம் பெற்றுள்ளது.

இந்தத் திட்டங்களில் குடி மக்களை மையமாகக் கொண்டவை. ஜனநாயகத்தின் மிகப்பெரிய உரைகல்களைில் ஒன்று அதன் குறைதீர்ப்பு முறையை வலுப்படுத்துவதாகும். இந்த திசையில் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்புத் திட்டம் நீண்டகால பயனைத் தரும். அதேபோல் நேரடி சிறு முதலீட்டுத் திட்டம் நடுத்தர வகுப்பினர், ஊழியர்கள், சிறு வணிகர்கள், மூத்தக் குடிமக்கள் ஆகியோரின் சிறு சேமிப்புகளை நேரடியாக ஈடுபடுத்தும் என்பதால் பொருளாதாரத்தில் அனைவரையும் உள்ளடக்கி வலுப்படுத்துவதாக இருப்பதோடு அரசு பங்குபத்திரங்களில் பாதுகாப்பை ஏற்படுத்தும். அரசு பங்குபத்திரங்கள் உத்திரவாதமான பைசல் முறையைக் கொண்டிருப்பதால் இது சிறு முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில், வாராக் கடன்கள் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டு, கடன் வசூல் மற்றும் தீர்ப்பாயம், பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு மீது கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒன்றன்பின் ஒன்றாக நிதித்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது.

வங்கித்துறையை மேலும் வலுப்படுத்த, கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக, இந்த வங்கிகளின் நிர்வாகம் மேம்பட்டிருப்பதுடன், முதலீட்டாளர்களிடையே இவற்றின் மீதான நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது .

கடந்த சில ஆண்டுகளில் நிதி சார்ந்த உள்ளடக்கிய சேவைகள் முதல், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வரை நாட்டின் வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. கோவிட் நெருக்கடி நேரத்தில் இவற்றின் வலிமையை நம்மால் காண முடிந்தது. ரிசர்வ் வங்கியின் முடிவுகளும், அண்மைக்காலத்தில் அரசு மேற்கொண்ட முக்கிய முடிவுகளின் விளைவுகளை அதிகரிக்க உதவியது.

6-7 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிச் சேவை, ஓய்வூதியம், காப்பீடு போன்றவை, இந்தியாவில் தனித்தன்மையுள்ள மன்றம் போன்று இருந்து. இந்த சேவைகளை நாட்டில் உள்ள சாமான்ய மக்கள், ஏழைக்குடும்பங்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள்- வியாபாரிகள், பெண்கள், தலித்துகள் - ஒடுக்கப்பட்ட– பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்டோர் எளிதில் அணுக முடியாததாக இருந்தது. முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் இந்தச் சேவைகளை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள் ஒருபோதும் அதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, மாற்றத்தை ஏற்படுத்தாதற்கு பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறிவந்தனர். வங்கிக் கிளை இல்லை, பணியாளர்கள் இல்லை, இணையதள வசதி இல்லை, விழிப்புணர்வு இல்லை, எந்த சிந்தனையும் இல்லை என்ற வாதங்களை எடுத்துரைத்தனர்.

யுபிஐ சேவை, இந்தியாவைக் குறுகிய காலத்தில் உலகின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாடாக மாற்றியது. 7 ஆண்டுகளில், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா 19 மடங்கு முன்னேறியுள்ளது. தற்போது நமது வங்கி முறை 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் 12 மாதங்களிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் செயல்பாட்டில் இருக்கிறது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும். பொறுப்புள்ள மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த இடம் என்ற இந்தியாவின் புதிய அடையாளத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்