கேரளாவில் மனைவி இறுதிச்சடங்கு: குடியரசுத் தலைவரிடம் கனத்தமனதுடன் பத்மஸ்ரீ விருது பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தாளர்: 200 நூல்கள் எழுதி சாதனை

By ஏஎன்ஐ


கேரளாவில் மனைவியின் இறுதிச்சடங்கு நடக்கும் தருவாயில் கனத்த மனதுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்ம ஸ்ரீ விருதை பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தாளர் பாலன் புத்தேரி பெற்றது அனைவரின் மனதையும் கலங்கச் செய்துள்ளது.

பாலன் புத்தேரி சிறுவயதிலேயே பார்வையை இழந்துவிட்டநிலையில், தனதுவிடா முயற்சியால் படித்து, எழுத்தாளராகி ஏறக்குறைய 211 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்து மதம், பாரம்பரியங்கள், கேரள வரலாறு என பல்வேறு தலைப்புகளில் பாலன் புத்தேரி எழுதிய நூல்களுக்கு கேரளாவில் பெரும் வரவேற்பு உண்டு.

புத்தேரி பாலனின் எழுத்துச் சேவை கல்வி்ச் சேவைையப் பாராட்டி, இந்த ஆண்டு பத்ம விருதுகளில் 4-வது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

ஆனால், பாலன் புத்தேரி விருது வாங்கிய நேரத்தில் அவருடைய மனதையும் மட்டுமல்லாமல் அனைவரின் கண்களையும் கலங்கச்செய்யும் சம்பவம் நடந்தது. பாலன் புத்தேரி 200க்கும் ேமற்பட்ட புத்தகங்களை எழுத ஊக்கமளித்து உதவியவர் அவரின் மனைவி சாந்தா. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாந்தா, நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார்.

கணவர் பாலன் புத்தேரி பத்ம ஸ்ரீ விருது வாங்குவதைப் பார்க்க ஆவலாக இருந்த சாந்தா அதைக் காணமுடியாமல் உயிரிழந்தார். ஆனால், தனது மனைவியின் கடைசி ஆசையான பத்ம ஸ்ரீ விருது வாங்காமல் வரக்கூடாது என்பதற்காக மனைவியின் இறப்புச் செய்தி கேட்டபின்பும், மிகுந்த துயரத்துடன் கனத்த மனதுடன் சென்று பாலன் புத்தேரி குடியரசுத் தலைவரிடம் விருதைப் பெற்றார்.

பாலன் புத்தேரிக்கு உதவியாக அவரின் மூத்த சகோதரர் உடன் வந்திருந்தார். குடியரசுத் தலைவரிடம் நேற்று பிற்பகல் பாலன் புத்தேரி விருதைப் பெற்ற அதே நேரத்தில் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கொண்டோட்டி எனும் கிராமத்தில் அவரின் மனைவி சாந்தாவின் இறுதிச்சடங்கும் நடந்தது.

தான் பத்மஸ்ரீ விருது பெறும் நேரத்தில் அதற்கு காரணமாக இருந்த மனைவி சாந்தாவும் வர வேண்டும் என்று பாலன் புத்தேரி மிகுந்த ஆசையாக இருந்தார். ஆனால், சாந்தாவின் உடல்நிலை அவர் டெல்லி புறப்பட்டு வரும் அளவி்ல்லை என்பதால், அவர் வீ்ட்டிலேயே தங்கினார்.

பாலன் மனைவி சாந்தா, விருது பெற்ற எழுத்தாளர் பாலன்

பாலன் புத்தேரி, சாந்தாவுக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார். அவரும் பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இறுதிச்சடங்கு முடிந்தநிலையில் இன்று இரவுதான் சொந்த ஊரகுக்கு பாலன் புத்தேரி சென்று சேர்வார் என எதிர்பார்்க்கப்படுகிறது.

பாலன் புத்தேரி கடந்த 1983ம் ஆண்டு தனது முதல்நூலை வெளியிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 50 நூல்களை பாலன் எழுதினார். அவரின் 50வது நூல் குருவாயூர் ஏகாதசி எனும் நூல்.
கேரளாவில் பெரிதாக அறியப்படாத பாலன் புத்தேரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதும் அனைவரும் வியப்புக்குள்ளாகினர்.

இந்து மதம், இந்து பாரம்பரியம், பூஜைகள், கலாச்சாரங்கள், பண்டிகைகள் குறித்து அதிகமாக எழுதிய பாலன் புத்தேரி ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததால், அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்