2007-08-ல் இந்தியாவில் 16.6% என்ற அளவில் மின் பற்றாக்குறை நிலவியதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் நாடு தழுவிய மின் விநியோகத்தில் இந்தியா பெரிய வெற்றிகளை பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2007-08-ல் இந்தியாவில் பெரியளவில் மின் பற்றாக்குறை (-16.6%) நிலவியது. 2011-12-ல் கூட -10.6% ஆக இருந்தது. அரசின் பல்முனை, விரிவான மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் மூலம், கடந்த 3 ஆண்டுகளில், இந்தப் பற்றாக்குறை கிட்டத்தட்ட பூர்த்தி செய்யப்பட்டு,- 2020-21-ல் 4%, 2019-20-ல் 7% மற்றும் -2018-19-ல் .8% ஆக இருந்தது.
நடப்பு ஆண்டில் அக்டோபர் வரை இது -1.2% ஆக இருந்தது. மின் உற்பத்தியின் மீதான பருவமழைக்குப் பிந்தைய வருடாந்திர அழுத்தத்தின் காரணமாக இது ஏற்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதுவும் இயல்பு நிலைக்கு வர வாய்ப்புள்ளது.
கடுமையான மின் பற்றாக்குறையிலிருந்து, 1%-க்கும் குறைவான மிகக் குறைந்த பற்றாக்குறையை நோக்கிய இந்த மாற்றம், தற்போதைய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் சாத்தியமானது.
கிராமப்புறங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி திட்டம் 2015 ஜூலை 25 அன்று கொண்டுவரப்பட்டது. நகர்ப்புறங்களில் உள்ள மின் உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்புவதற்காக 2014 நவம்பர் 20 அன்று ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் அன்று கொண்டு வரப்பட்டது. பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் (சௌபாக்யா) திட்டம் 2017 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையை இது கொண்டிருந்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான வீடுகளுக்கு மின்சார இணைப்புகளை வழங்க முடிந்தது.
இந்த முயற்சிகளின் விளைவாக, நாட்டின் நிறுவப்பட்ட மின் திறன் அதிகரித்து, கடந்த 7 ஆண்டுகளில் 155377 மெகாவாட் ஆக உள்ளது என்று மத்திய மின்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago