கோவாக்சின் தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகளிலும் அனுமதி பெற மத்திய அரசு தூதரங்கள் மூலம் தீவிரப் பேச்சு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியதையடுத்து, பல்வேறு நாடுகளிலும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசி உருவாக்கின. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்தது.

இதில் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனம் தயாரி்த்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பல நாடுகள் அனுமதியளித்தன, உலக சுகாதார அமைப்பும் அனுமதியளி்த்து. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் தாமதித்தது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி அவசரகாலப் பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார் அமைப்பு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல நாடுகளில் தூதரகங்கள் வாயிலாக பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தற்போதைய நிலையில் இந்தியர்கள் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால், அவர்களுக்கு எந்தவிதமான தனிமைப்படுத்தும் விதிகள் இல்லாமல் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கின்றன. பெரும்பாலான நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீரித்துள்ளன. இந்த தடுப்பூசி அஸ்ட்ராஜென்கா, ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தடுப்பூசி என்பதால், எளிதாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.

இதுவரை கோவாக்சின் தடுப்பூசிக்கு 12 நாடுகள் மட்டுமே அனுமதியளித்துள்ளன. நாளை(8ம்தேதி) முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்திய இந்தியர்களை எந்தவிதமான தடையின்றி அனுமதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடன் இணக்கமாக, சுமூக உறவுகள் கொண்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி, கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளதாக மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்