மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தநிலையில் அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.
அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் தீ பரவிய நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயாளிகளை வெளியேற்றப்பட்டனர்.
» கோவிட்-19 தடுப்பூசி; 107.92 கோடியை கடந்தது
» டெல்லியை முடக்கிய காற்று மாசு; அவசர நடவடிக்கையாக வாகனங்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு
நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மகாராஷ்ட்ரா மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மகாராஷ்ட்ர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது துயரத்தை தந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago