கேதார்நாத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசியுங்கள்; நமது கலாசார பெருமையை உலகம் கண்டு வியக்கிறது: பிரதமர் மோடி 

ஆன்மீக யாத்திரை மூலம் நமது கலாசாரங்களை தெரிந்து கொள்ள முடியும், கேதார்நாத் ஜோதிர்லிங்கத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோயில் சேதம் அடைந்தது. கோயில் அருகே இருந்த ஆதி சங்கரர் சிலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோயில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணி 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.

கேதார்நாத் கோயில் அருகே 12 அடி உயரமும் 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உத்தரகாண்டில் கடந்த 2013- ம் ஆண்டு சேதத்திற்கு பிறகு கேதார்நாத் மீண்டும் சீரமைக்கப்படுமா என மக்கள் நினைத்தார்கள். ஆனால், என்னுள் எழுந்த குரல் ஓன்று, கேதார்நாத் மீண்டும் மறுகட்டமைக்கப்படும் என எப்போதும் சொல்லி கொண்டிருந்தது.

டெல்லியில் இருந்தவாறு, கேதார் மறுசீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்தேன். ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் மூலம் இங்கு நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தேன். இன்று கேதார்நாத் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது. ஆன்மீக யாத்திரை மூலம் நமது கலாசாரங்களை தெரிந்து கொள்ள முடியம். கேதார்நாத் ஜோதிர்லிங்கத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும். யாத்திரை மூலம் மகிழ்ச்சியுடன் பாரம்பரியமும் கிடைக்கிறது.

சமுதாய நன்மை என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர் ஆதிசங்கரர், கடவுள் சிவனின் அவதாரம். மனித நேயத்திற்காக அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆதிசங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகம் தருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE