உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு இன்று ஆதி சங்கரர் சிலையை திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நேற்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ளார். காலை கேதார்நாத் கோயில் செல்லும் பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதி சங்கரர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோயில் சேதம் அடைந்தது. கோயில் அருகே இருந்த ஆதி சங்கர் சிலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோயில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணி 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
கேதார்நாத் கோயில் அருகே 12 அடி உயரமும் 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago