92% பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு மற்றும் ஆசிரியர்களின் தடுப்பூசி செலுத்திய நிலை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்தார். அப்போது
நாட்டில் 92 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு மற்றும் ஆசிரியர்களின் தடுப்பூசி செலுத்திய நிலை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கல்வித் துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலையும், துடிப்பான ஆர்வமும் இயல்பு நிலைக்கு திரும்புவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தற்போது வரை பெரும்பாலான மாநிலங்கள் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகளை ஏற்கெனவே திறந்துள்ளன. 92 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்