3 மக்களவை தொகுதி; 29 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

By ஏஎன்ஐ

நாடு முழுவதும் நடந்த 3 மக்களவை தொகுதி; 29 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.2) காலை தொடங்கியது.

கடந்த சனிக்கிழமையன்று அசாமில் 5, மேற்குவங்கத்தில் 4, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் தலா 3 தொகுதிகள், பிஹார், கர்நாடகா, ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகள், ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானாவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் எம்.பி. ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மக்களவை தொகுதியின் எம்.பி. நந்த் குமார் சிங் சவுகான் மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியின் எம்.பி. மோகன் தேல்கர் ஆகியோர் மரணமடைந்தனர்.

இதையடுத்து, காலியாக உள்ள இந்த 3 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கும் கடந்த சனிக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், 3 மக்களவை மற்றும் 29 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இந்தத் தேர்தல் முடிவுகளையும் பாஜக, காங்கிரஸ் பெரிதும் எதிர்பார்த்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்