பிஹார் மற்றும் ஜார்கண்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடி வருவாய் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிஹார் மற்றும் ஜார்கண்டில் சாலை கட்டுமானத்தில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர் ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தக் கட்டுமான நிறுவனக் குழுமம் லாபங்களை மறைத்து அவற்றை பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளது. பின் இந்தப் பொருட்கள் சந்தையில் ரொக்கப்பணத்திற்கு விற்கப்பட்டுள்ளன. இந்தப் பணம் வருவாய் கணக்கில் காட்டப்படவில்லை. இதர தொழில்களுக்கும் இந்நிறுவனம் தனது வருவாயை செலவழித்துள்ளது.
இதற்கான ஆவணங்கள், போலி ரசீதுகள் வருமான வரிச்சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரூ.5.71 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. பத்து வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. நிரந்தர வைப்புக் கணக்கில் சுமார் ரூ.60 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சோதனை மூலம் ரூ.100 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
» தொடர்ந்து 4-வது மாதம்: அக்டோபரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்வு
» 2022-ம் ஆண்டில் பல ரயில்வே பள்ளிகளை மூட மத்திய அரசு திட்டம்?
-----
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago