தொடர்ந்து 4-வது மாதம்: அக்டோபரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்வு

By ஏஎன்ஐ

அக்டோபர் மாதத்திலும் சரக்கு மற்றும் சேவை வரி ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4-வது மாதமாக வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

'2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 127 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 4-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் ஜிஎஸ்டி வரி வருவாயைவிட 24 சதவீதம் கூடுதலாகவும், 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட 36 சதவீதமும் கூடுதலாக இந்த ஆண்டு வரி வசூலாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 5 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரிதான் 2-வது அதிகபட்சமாகும். ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி எட்டியது. ஜூலையில் ரூ.1.16 லட்சம் கோடியும், ஆகஸ்டில் ரூ.1.12 லட்சம் கோடியும், செப்டம்பரில் ரூ.1.17 லட்சம் கோடியும் வசூலாகியது.

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 127 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.23 ஆயிரத்து 861 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.30 ஆயிரத்து 421 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.67 ஆயிரத்து 361 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.8 ஆயிரத்து 484 கோடி கிடைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக இருக்கிறது. இது முதல் காலாண்டில் சராசரியாக ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. முதல் காலாண்டை விட 2-வது காலாண்டில் சராசரி வருவாய் 5 சதவீதம் அதிகரித்தது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்