மும்பையில் உள்ள எம்டிஎல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட போர்க்கப்பல், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 பி திட்டத்தின் கீழ், 4 போர்க்கப்பல்களை, மும்பையில் உள்ள மஸ்கான் டாக்ஸ் லிமிடெட் (எம்டிஎல்) என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரிக்க கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு நாட்டின் முக்கிய நகரங்களான விசாகப்பட்டினம், மர்முகோவா, இம்பால் மற்றும் சூரத் என பெயரிடப்பட்டன.
இதில் 127ஒய் 12704 (விசாகப்பட்டினம்) என்ற கப்பல் தயாரிக்கும் பணி முடிவடைந்து, இந்திய கடற்படையிடம் கடந்த 28ம் தேதி வழங்கப்பட்டது.
இந்த போர்க்கப்பலின் வடிவமைப்பு, இந்திய கடற்படையின் வடிவமைப்பு இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்டு, மும்பை உள்ள எம்டிஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
» கரோனா வேலை நீக்கம்; விமானங்களை இயக்க ஆளில்லை: நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
» லாட்டரியில் 2 பில்லியன் டாலர் பரிசு: கரோனாவில் காத்திருந்து வென்ற அமெரிக்க முதியவர்
163 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்கப்பல், 30 நாட் வேகத்தில் செல்லும். இந்த கப்பலில் உள்ள 75 சதவீத பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
இந்த கப்பலில் பெங்களூர் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், பிரம்மோஸ் ஏவகணைகள், மும்பை எல் அண்ட் டி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் டார்பிடோ ரக ஏவுகணைகளை ஏவும் கருவிகள், ராக்கெட் குண்டுகள் ஏவும் கருவிகள், ஹரித்துவார் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 76 எம்.எம் சூப்பர் ரேபிட் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், தற்சார்பு இந்தியா கொள்கைப்படி இந்த போர்க்கப்பல் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago