கேரளா, மேற்கு வங்கம்: மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு

கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:

நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரு ஜோஸ் கே மணி (கேரளா), ஆர்பிதா கோஷ் (மேற்கு வங்கம் ) ஆகியோர் ராஜினாமா செய்ததால் முறையே 11.01.2021, 15.09.2021 ஆகிய தேதிகளிலிருந்து காலியிடங்கள் ஏற்பட்டன. இருப்பினும் கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக இந்த மாநிலங்களிலிருந்து இடைத்தேர்தல் நடத்த உரிய சூழல் இல்லை என்று 28.05.2021 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தற்போது இம்மாநிலங்களின் அனைத்து நிலைமைகளையும் பரிசீலித்து இந்த இடங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 9 11 2021 (செவ்வாய்)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் :16.11. 2021(செவ்வாய்)

வேட்பு மனுக்கள் பரிசீலனை: 17.11. 2021 (புதன்)

வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள்:
22.11.2021 (திங்கள்)

தேர்தல் தேதி: 29.11.2021 (திங்கள்)

வாக்குப்பதிவு நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை

வாக்குகள் எண்ணிக்கை: 29.11.2021 திங்கள் மாலை 5 மணி

தேர்தல் தொடர்பான பணிகள் 1.12. 2021 புதன் கிழமைக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும்

இந்த இடைத்தேர்தல்களில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மூத்த அதிகாரி ஒருவரைப் பணியமர்த்துமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE