2020-ம் ஆண்டில் ரூ.1.92 லட்சம் கோடிக்கு பயிர் காப்பீடு; விவசாயிகள் பெற்ற இழப்பீடு ரூ.9,570 கோடி: 2019-யை விட 60% குறைவு

By செய்திப்பிரிவு


விவசாயிகளின் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பைசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இது கடந்த 2019-20ம் ஆண்டைவிட 60 சதவீதம் குறைவாகும். 2019-20ம் ஆண்டில் ரூ.27,398 கோடி இழப்பீடாக விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது அதாவது கடந்த ஆண்டில் பெரும்பாலும் பயிர் இழப்பு நடக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016-17ம் ஆண்டில் பயிர்களுக்கான காப்பீடு திட்டமான பிரதமர் பைசல் பிமா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபின் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு ராபி பருவம், மற்றும் 2020ம் ஆண்டு கரீப் பருவத்தில் திட்டத்தின் விதிமுறைகள் திருத்தப்பட்டது, விவசாயிகளுக்கு பலன்கள் உரியநேரத்தில் போதுமான அளவு கிடைக்கும் வகையில் வகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, 2020-21ம் ஆண்டில் நாட்டில் 445 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் 6.12 கோடி விவசாயிகளால் ரூ.ஒரு லட்சத்து 93 லட்சத்து 767 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது.

இதில் இழப்பீடாக ரூ.9ஆயிரத்து 570 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரீப் பருவத்தில் ரூ.6,799 கோடியும், ராபி பருவத்தில் ரூ.2,792 கோடியும் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

அதாவது கடந்த ஆண்டில் விசாயிகள் தரப்பில் ரூ.1.93 லட்சம் கோடி காப்பீடாக காப்பீடு நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்டுஅதில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.1.84 லட்சம் கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு லாபமாகச் சென்றுள்ளன.

மத்திய வேளாண்துறை அமைச்சகம் அதிகாரிகள் கூறுகையில் “ கடந்த 2020-21ம் ஆண்டில் நாட்டில் பெரும்பாலும் பயிர் இழப்பு எங்கும் ஏற்படாத காரணத்தால்தான் மிகக்குறைவாக இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 2019-20 ஆண்டில் வழங்கப்பட்ட இழப்பீட்டைவிட கடந்த ஆண்டு வழங்கப்பட்டது 60 சதவீதம் குறைவு” எனத் தெரிவித்தனர்.

அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.3,602கோடியும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ரூ.1,232 கோடியும், ஹரியானாவில் ரூ.1,112.80 கோடியும் கடந்த 2020-21ம்ஆண்டில் பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20ம் ஆண்டில் 501 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் 6.13 கோடி விவசாயிகளால் ரூ.2 லட்சத்து19ஆயிரத்து 226 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது. இதில் கரீப் சீசனில் ரூ.21,496 கோடியும் ராபி பருவத்தில் ரூ.5,902 கோடியும் இழப்பீடு வழங்கப்பட்டது.

2019-20ம் ஆண்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.6,757 கோடியும், அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச விவசாயிகளுக்கு ரூ.5992 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4,921 கோடியும் வழங்கப்பட்டது. 2019-20ம் ஆண்டில் பயிர் காப்பீடு இழப்பீடு ஏறக்குறைய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும்ரூ.1200 கோடி வழங்கப்பட உள்ளது அது விரைவில் வழங்கப்பட்டுவிடும் எனஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2020-21ம்ஆண்டில் இதுவரை 6,845 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்