ஒரே செடியில் கத்தரிக்காய், தக்காளி

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத் தின் வேளாண் விஞ்ஞானிகள் கலப்பின முறையில் ஒரே செடியில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை வளர்த்து புதிய சாதனை செய்துள்ளனர்.

கத்தரிக்காயின் ஆங்கிலப் பெயரான ‘பிரிஞ்சால்’, தக்காளியின் ஆங்கிலப் பெயரான ‘டொமாட்டோ’ ஆகியவற்றை இணைத்து இந்தச் செடிக்கு ‘பிரிமாட்டோ’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ஒரு செடியின் பாகத்தை மற்றொரு செடியின் தண்டு அல்லது வேரில் இணைத்து வளர்க்கப்படும் முறையில் இந்தப் புதிய கலப்பின செடி வளர்க்கப்பட்டுள்ளது. 25 முதல் 30 நாட்கள் ஆன கத்திரிக்காய் விதைகள், 25 நாட்களான தக்காளி விதைகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு கட்டுப்படுத்தப் பட்ட சீதோஷ்ண நிலையில் வளர்த்து பின்னர் மேலும் ஒரு வாரம் நிழலில் வளர்த்து அதன் பிறகு நிலத்தில் பயிரிடப்படுகிறது.

இதுபோல் நகரங்களில் சிறிய இடத்தில் கூட வளர்க்க லாம். ஒவ்வொரு செடியும் 2.3 கிலோ தக்காளி, 2.6 கிலோ கத்தரிக்காய் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்