கோவேக்சின் போட்டு கொண்டவர்கள் வெளிநாடு செல்வதற்காக கோவிஷீல்டு செலுத்த உத்தரவிட முடியாது; மக்களின் உயிருடன் விளையாட கூடாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

“எந்தவித மருத்துவ தரவுகளையும் ஆராயாமல், கோவேக் சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கு கோவிஷீல்டு தடுப் பூசியை செலுத்த உத்தரவிட முடியாது" என உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

இந்தியாவை பொறுத்த வரை, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு தடுப் பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப் பட்டு வருகின்றன. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. இதன் காரணமாக, இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களை சில நாடுகள் அனுமதிக்க மறுத்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் பயிலும் அல்லது பயில திட்டமிட்டுள்ள மாணவர்கள், வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக் சேத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “ கோவேக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்காததால், ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மறுபடியும் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

கோவேக்சின் தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த மருத்துவத் தரவுகள் நம்மிடம் இல்லை. எவ்வித மருத்துவ தரவுகளையும் ஆராயாமல் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மக்களின் உயிருடன் விளையாட கூடாது. கோவேக்சின் தடுப்பூசி தொடர்பான அறிக்கை களை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துக்காக பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக செய்தித் தாள்கள் மூலம் தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் முடிவுக்காக சிறிது காலம் காத்திருப்போம். இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை, தீபாவளிக்கு பிறகு நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்