கரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை

By ஏஎன்ஐ

கரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி, 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியது.

இதுவரை 1,03,53,25,577 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், புதிதாக உலகம் முழுவதும் ஏஒய் 4.2 வகை வைரஸ் பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸின் வேற்றுருவாக்கம் தான் இந்த ஏஒய் 4.2 . இந்த வகை வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் உயிர்ப்பலியை அதிகமாக ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், கரோனா தடுப்பூசித் திட்டத்தை ஜனவரிக்குள் இன்னும் வேகமாக அதிகமாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்