கட்டாய மதமாற்ற தடை சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது: பெங்களூரு பேராயர் கருத்து

By இரா.வினோத்

கர்நாடகாவில் இந்துக்கள் அதிக அளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, உ.பி., ம.பி. மாநிலங்களைப் போல கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆயர்கள் கடந்தவாரம் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தோம். அப்போது எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது இந்தசட்டத்தை விரைவில் அமல்படுத் துவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26-ம் பிரிவுக்கு எதிரானது. இதனை அமல்படுத்தினால் கர்நாடகாவில் மத முரண்பாடுகள் உருவாவதற்கு வழிவகுக்கும்.

சமூக அமைதியை கெடுக்கும் அமைப்புகள் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்கும் அபாயம் உள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அனைவரையும் தண்டிக்க முற்படுவது தவறானது. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் நவம்பர் 12-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும். மேலும், மீண்டும் முதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்த இருக்கிறோம். இவ்வாறு பீட்டர் மச்சாடோ தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்